Loading...
சீனியர் வீரர்களுக்கும் சலுகை கிடையாது! யோ-யோவை விடக் கடினமான ப்ராங்கோ டெஸ்ட்; பிசிசிஐ அதிரடி உத்தரவு
இந்திய கிரிக்கெட் அணியின் உடல்தகுதி விதிகள் கடுமையாக்கம்

சீனியர் வீரர்களுக்கும் சலுகை கிடையாது! யோ-யோவை விடக் கடினமான ப்ராங்கோ டெஸ்ட்; பிசிசிஐ அதிரடி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2026
05:04 pm

செய்தி முன்னோட்டம்

டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியான தோல்விகளையும் வீரர்களின் காயம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டதும், மூத்த வீரர்கள் ஓட்டங்கள் எடுப்பதிலும் மைதானத்தில் வேகமாக ஓடுவதிலும் திணறியதும் அணி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. இதன் காரணமாக, பெங்களூரில் உள்ள பிசிசிஐ தேசிய மையத்தில் அனைத்து வீரர்களுக்கும் எவ்விதச் சலுகையும் இன்றி ஒரே மாதிரியான கடுமையான உடல்தகுதித் தேர்வுகளை உடனடியாக நடத்த பிசிசிஐ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பிசியோதெரபிஸ்ட்டிற்கு உத்தரவு

சீனியர் வீரர்களுக்கு சலுகை இல்லை

இதுவரை இந்திய அணியில் உள்ள பிரபல சீனியர் வீரர்களுக்கு உடல்தகுதித் தேர்வுகளில் சில தளர்வுகளும் எளிமையான இலக்குகளும் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், இனிமேல் வீரர்களின் நட்சத்திர அந்தஸ்தைப் பார்க்காமல் உடல்தகுதியில் பிட் ஆக இல்லாத வீரர்களைத் தயங்காமல் வெளியில் அனுப்ப வேண்டும் என்று அணி பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயினுக்கு பிசிசிஐ கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் எந்த ஒரு பிரபல வீரராக இருந்தாலும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் விளையாட முடியும் என்ற கடுமையான நிலை தற்போது பிசிசிஐ அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.

கடுமை

'ப்ராங்கோ' டெஸ்ட் மற்றும் 2 கி.மீ ஓட்டம் கடுமையாக்கம்

இந்திய அணியில் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த யோ-யோ தேர்வுக்குப் பதிலாகத் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ப்ராங்கோ' உடல்தகுதித் தேர்வு மேலும் கடினமாக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர் ஏட்ரியன் லெரூக்ஸ் வழிகாட்டலின்படி, வீரர்கள் அனைவரும் ப்ராங்கோ தேர்வை 5.15 முதல் 5.20 நிமிடங்களுக்குள் முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 2 கிலோமீட்டர் தூரத்தை 9 முதல் 10 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க வேண்டும் என்ற புதிய இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை எட்டாத வீரர்கள் உடனடியாகத் தேர்விலிருந்து நீக்கப்படுவார்கள்.

இந்தக் கடுமையான நிபந்தனையானது அனைத்து இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கும் விதிவிலக்கின்றிப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எச்சரிக்கை

ஹர்ஷித் ராணா சர்ச்சை மற்றும் பிசிசிஐயின் எச்சரிக்கை

சமீபத்தில் வீரர் ஹர்ஷித் ராணா 97 கிலோ எடையுடன் இருந்தபோதும், போதிய பரிசோதனைகள் இன்றி அவசர அவசரமாக இங்கிலாந்து தொடருக்கு அனுப்பப்பட்டார்.

பின்னர் அவர் 4 கிலோ கூடுதல் எடையுடன் இருப்பது கண்டறியப்பட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் பிசிசிஐ தேசிய மையத்தைக் கடுமையாக எச்சரித்ததுடன், ராணாவின் எடையை 96 கிலோவாகக் குறைக்கக் கெடு விதித்தது.

தற்போது அவர் தனது எடையை 94 கிலோவாகக் குறைத்துள்ள நிலையில், விரைவில் பிசிசிஐயின் முழுமையான உடல்தகுதி சான்றிழைப் பெற்றுத் திரும்புவார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT