LOADING...
ஐபிஎல் 2026: பிசிசிஐ-யின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு; மார்ச் 28 முதல் போட்டிகள் தொடக்கம்
ஐபிஎல் 2026: மார்ச் 28 முதல் போட்டிகள் தொடக்கம்

ஐபிஎல் 2026: பிசிசிஐ-யின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு; மார்ச் 28 முதல் போட்டிகள் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2026
12:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28, 2026 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் பயிற்சியை மேம்படுத்த பிசிசிஐ சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மார்ச் 28 அன்று தொடங்கவுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், பிசிசிஐ-யின் இந்த 'ஸ்டிரிக்ட்' ரூல்ஸ் கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகள் இதோ

1. டீம் பஸ் கட்டாயம்: போட்டி நடைபெறும் நாட்களில் வீரர்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீரர்களும் அணிக்கு ஒதுக்கப்பட்ட பேருந்திலேயே மைதானத்திற்கு வர வேண்டும். 2. குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை: வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அணி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. 3. பயிற்சி மைதானக் கட்டுப்பாடுகள்: பயிற்சி நடைபெறும் போது அங்கீகரிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மட்டுமே மைதானத்திற்குள் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மைதானத்தின் 'ஹாஸ்பிடாலிட்டி' பகுதியில் அமர்ந்து மட்டுமே பயிற்சியைப் பார்க்க முடியும். 4. கூடுதல் பயிற்சிக்குத் தடை: ஒரு அணி தனது பயிற்சியை முன்கூட்டியே முடித்துக்கொண்டால், அந்த காலி இடத்தைப் பயன்படுத்தி மற்றொரு அணி கூடுதல் பயிற்சி எடுக்க அனுமதி கிடையாது.

Advertisement