பேயர்ன் முனிச் கால்பந்து அணியில் இணைந்தார் கொன்ராட் லைமர்
செய்தி முன்னோட்டம்
பேயர்ன் முனிச் கால்பந்து அணி ஆஸ்திரிய மிட்பீல்டர் கொன்ராட் லைமரை ஆர்பி லீப்ஜிக்கிடம் இருந்து இணைத்துக் கொண்டார். 26 வயது இளைஞரான லைமரை வாங்க பல பிரீமியர் லீக் கிளப்புகளும் போட்டியிட்ட நிலையில், பேயர்ன் அணியில் இணைந்துள்ளார். லைமர் ஜூன் 30, 2027 வரை பேயர்ன் முனிச் அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய லைமர், "கனவு நனவானது போல் உள்ளது. பேயர்ன் முனிச் கால்பந்து கிளப் உலகின் மிகப்பெரிய கிளப்களில் ஒன்றாகும். கிளப்புக்காகவும் ரசிகர்களுக்காகவும் என்னால் ஆன எல்லாவற்றையும் செய்வேன்." என்று தெரிவித்துள்ளார். லைமர் மூன்று ஆஸ்திரிய பன்டெஸ்லிகா பட்டங்களையும் மூன்று ஆஸ்திரிய கோப்பைகளையும் வென்றுள்ளார். லீப்ஜிக் உடன், அவர் இரண்டு தொடர்ச்சியான டிஎப்பி-போக்கல் கௌரவங்களையும் பெற்றுளளர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
𝑳𝑨𝑰𝑴𝑬𝑹 2️⃣0️⃣2️⃣7️⃣ #MiaSanMia #ServusKonrad pic.twitter.com/w8AuU7P5iZ
— FC Bayern Munich (@FCBayernEN) June 9, 2023