
5 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி
செய்தி முன்னோட்டம்
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.
முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
தொடக்க ஆட்டக்காரராக ஸ்மிரிதி மந்தனா ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில், ஷஃபாலி வர்மாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்து இன்னிங்ஸை மீண்டும் கட்டமைத்தனர்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28 ரன்கள் எடுத்து வெளியேறினாலும், ஹர்மன்பிரீத் கவுர் போராடி 40 ரன்கள் சேர்த்தார்.
india lost 6 wickets for 12 runs
12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா
16 ஓவரில் 90/3 என்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இருந்ததால், நிச்சயம் பெரிய ஸ்கோர் எட்டப்படும் என எதிர்பார்த்த நிலையில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வெளியேறினார்.
17வது ஓவரில் அவர் ஆட்டமிழந்த நிலையில், கடைசி நான்கு ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி மொத்தம் 102 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 103 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, ஒரு ஓவர் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி, 4விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி, 5 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவை வீழ்த்தியுள்ளது. எனினும், முதல் இரண்டு டி20 போட்டிகளையும் இந்தியா வென்றதால், தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.