ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
நோவக் ஜோகோவிச் 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தோல்வியடைந்துள்ளார். உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தனது வாழ்க்கையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்தார். அவரை 4-ம் நிலை வீரரான ஜன்னிக் சின்னர் 4 செட்களில் வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 4ஆம் நிலை வீரரான சின்னரால் வெளியேற்றப்பட்டதால், 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தோல்வியடைந்தார். இந்த தோல்வி டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஜோகோவிச்சை 3 மணி 22 நிமிடங்களில் 1-6, 2-6, 7-6(6), 3-6 என்ற செட் கணக்கில் ஜானிக் சின்னர் தோற்கடித்தார்.