Page Loader
ஆசிய விளையாட்டுப் போட்டி : 1,500 மீட்டர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டி 1,500 மீட்டர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டி : 1,500 மீட்டர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2023
06:55 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் ஹாங்சோவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி வென்றார். பெயின்ஸ் பந்தய இலக்கை 4:12:74 நிமிடங்களில் இலக்கை எட்டினார். ஹர்மிலன் பெயின்ஸ் பின்னணியை பொறுத்தவரை, அவரது தந்தை அமந்தீப் பெயின்ஸ் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்றவர் ஆவார். அதேபோல், அவரது தாய் மாதுரி சக்சேனா 2002 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவார். தந்தை மற்றும் தாய் இருவரும் ஓட்டப்பந்தய வீரர்கள் என்பதால், அவர்களிடமிருந்து விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டு, தற்போது இந்தியாவுக்காக பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

Asian Games India secures medal in 1500m men and women

1,500 மீட்டர் ஆடவர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற இந்தியா

ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ் வெள்ளி மற்றும் ஜின்சன் ஜான்சன் வெண்கலமும் வென்றனர். சரோஜ் போட்டி இலக்கை 3:38:94 நிமிடங்களிலும், ஜான்சன் 3:39:74 நிமிடங்களிலும் இலக்கை எட்டினர். இதில், ஜின்சன் ஜான்சன் 2018இல் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1,500 மீட்டர் பிரிவில் தங்கமும், 800 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருந்த நிலையில், 2019இல் காயத்தால் பாதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 2020இல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்தை எதிர்கொண்ட ஜின்சன் ஜான்சன், விடாமுயற்சியுடன் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.