Page Loader
பாய்மர படகில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விஷ்ணு சரவணனின் பின்னணி
பாய்மர படகில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விஷ்ணு சரவணனின் பின்னணி

பாய்மர படகில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விஷ்ணு சரவணனின் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2023
02:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பாய்மரப் படகு வீரரான விஷ்ணு சரவணன் சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் ஆடவர் டிங்கி ஐஎல்சிஏ-7 நிகழ்வில் வெண்கலப் பதக்கம் பெற்றார். சவாலான 11-பந்தயப் போட்டியின் மூலம் 34 புள்ளிகளைப் பெற்று வெண்கலத்தை உறுதி செய்தார். இந்த சாதனையின் மூலம் பாய்மரப்போட்டியில் நாட்டின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இந்த போட்டியில் தென் கொரியாவின் ஜீமின் எச்ஏ 33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்ததால், சரவணன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் ஜுன் ஹான் ரியான் லோ 26 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

vishnu saravanan cliches bronze in sailing

யார் இந்த விஷ்ணு சரவணன்?

வேலூரைச் சேர்ந்த இராணுவ வீரரும் பாய்மர படகு வீரருமான தனது தந்தை ராமச்சந்திரன் சரவணனால் ஈர்க்கப்பட்டு விஷ்ணு சரவணன் இந்த விளையாட்டில் இணைந்தார். 17 வயதானபோது, விஷ்ணு 2015இல் மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் கேடட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இந்திய இராணுவத்தில் நைப் சுபேதாராகச் சேர்ந்தார். இந்திய ராணுவத்தின் ஆதரவுடன் பயிற்சியை தொடர்ந்த விஷ்ணு சரவணன் தனது முதல் மூத்த தேசிய சாம்பியன்ஷிப்பை 2018இல் வென்றார். உச்சகட்டமாக 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 20வது இடம் பிடித்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். அவரது சகோதரி ரம்யா சரவணனும் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.