
விராட் கோலி போல் தத்ரூபமாக இருக்கும் ஓவியம் : ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்!
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் உருவப்படத்தை மிகவும் தத்ரூபமாக வரைந்து ட்விட்டரில் பகிரப்பட்ட நிலையில், கோலியே அந்த படத்தை பாராட்டியுள்ளார்.
டபிள்யூபி ரம்பிள் பண்ட்ஸ் என்பவர் இந்திய வீரர் அஸ்வினின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்து வெளியிட அது வைரலாகிவிட்டது. ஒரு சாதாரண ஓவியத்தை விட புகைப்படம் போலவே தோற்றமளிக்கும் இந்த ஓவியத்தை பலரும் பாராட்டினர்.
இதையடுத்து விராட் கோலியின் ஓவியத்தை வரைந்து வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அஸ்வினின் ஓவியத்திற்கு கொடுத்த வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், அதே போல் இதற்கும் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை விராட் கோலி தனது மொபைலில் காட்டும் புகைப்படம் ஒன்றையும் அவர் கூடவே பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் ட்விட்டர் பதிவு
I have to admit, I’ve been overwhelmed by the reaction to the Ashwin painting.
— WG RumblePants (@WG_RumblePants) February 19, 2023
THANK YOU SO MUCH to everyone who shared it or left comments. So many people have been so very kind.
And for all my new Indian followers, here’s an old favourite. pic.twitter.com/pIfpgThkgz