ஐபிஎல்லில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்
ஐபிஎல் 2023 இன் 46வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மிகமோசமான சாதனையை படைத்துள்ளார். புதன்கிழமை (மே 3) நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்சில் 214ரன்கள் குவித்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவின் அபார ஆட்டத்தால் 18.5ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மொஹாலி ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் அதிக ரன்கள் குவித்த போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளும் சிதறடிக்கப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங் ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர்கள்
அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் தனது 4 ஓவர்கள் முழு ஒதுக்கீட்டை முடிக்காமலேயே அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் ஆனார். அர்ஷ்தீப் 3.5 ஓவர்களில் 66 ரன்களை விட்டுக் கொடுத்தார். பென் வீலர் 3.1 ஓவர்களில் 64 ரன்களுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். டாம் கர்ரன், பாட் பிரவுன் மற்றும் அலெக்ஸ் டிசிகா ஆகியோர் 63 ரன்களை விட்டுக் கொடுத்து பட்டியலில் மூன்றாவது இடத்தில் உளளார். நான்கு ஓவர்களை முழுமையாக முடித்து அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய பசில் தம்பி 2018 இல் 70 ரன்களை விட்டுக் கொடுத்து முதலிடத்தில் உள்ளார்.