ஆசிய விளையாட்டுப் போட்டி: குதிரையேற்றம் டிரஸ்சேஜ் போட்டியில் முதல் தனிநபர் பதக்கம் வென்ற இந்தியா
வியாழக்கிழமை (செப்டம்பர் 28) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அனுஷ் அகர்வாலா தனி நபர் குதிரையேற்றம் டிரஸ்சேஜ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். அனுஷ் அகர்வாலா 73.030 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குதிரையேற்ற டிரஸ்சேஜ் போட்டியில் இந்தியாவின் முதல் தனிநபர் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கிடையே, இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ஹிருதய் விபுல் சேடா தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தாலும், நாக் அவுட் ஆனதால் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கவில்லை. முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் நடந்த குதிரையேற்ற பந்தயமான டீம் டிரஸ்சேஜ் போட்டியில் இந்தியா 41 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
குதிரையேற்றம் டிரஸ்சேஜ் போட்டியில் முதல் தனிநபர் பதக்கம் வென்ற இந்தியா
Medal Alert🚨 in Equestrian🏇 Bronze🥉 it is for Anush Agarwalla in Individual Final Event, marking 🇮🇳's 1⃣st ever individual🎖️in Dressage Well done & many congratulations on your🥉#Cheer4India#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/P4Cf9G9KZK— SAI Media (@Media_SAI) September 28, 2023