Page Loader
எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த அஜின்கியா ரஹானே
எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த அஜின்கியா ரஹானே

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த அஜின்கியா ரஹானே

எழுதியவர் Sekar Chinnappan
Apr 10, 2023
02:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் தனது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றை உருவாக்கி, அஜின்கியா ரஹானே 2023 சீசனின் அதிவேக அரை சதத்தை அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக தனது அறிமுக போட்டியில் 19 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டினார். மும்பை இந்தியன்சுக்கு எதிராக வான்கடேவில் சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடந்த போட்டியில் இந்திய வீரர் மொயீன் அலி சாப்பிட்ட உணவு சேராததால் போட்டியில் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவருக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய அஜின்கியா அதிவேக அரைசதம் அடித்ததோடு, எம்எஸ் தோனியின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

அஜின்கியா ரஹானே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாவது அதிவேக அரைசதம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிவேக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 2014 இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 16 பந்துகளில் அரை சதம் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, மொயீன் அலி 2022 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 19 பந்துகளில் அரைசதம் எட்டினார். இதையடுத்து தோனி மும்பை இந்தியன்சுக்கு எதிராக 2012 இல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில், 2023 இல் ரஹானே அதே மும்பை இந்தியன்சுக்கு எதிராக 19 பந்துகளில் அரைசதம் அடித்து தோனியின் சாதனையை முறியடித்து, மொயீன் அலியின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.