
ஐபிஎல்லுக்கு அடுத்து என்ன? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்
செய்தி முன்னோட்டம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2023 முடிந்த பிறகு மீண்டும் வர்ணனையாளராக மாற உள்ளார்.
அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொடரில் முதல் முறையாக வர்ணனையாளராக மாறினார்.
சமீபத்தில், பார்டர்-கவாஸ்கர் டிராபி 2023லும் தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்தார்.
மேலும் ஐபிஎல் 2023இல் ஆர்சிபி அணியில் வீரராக பங்கேற்று விட்டு பின்னர் ஜூன் மாதத்தில் நடக்க உள்ள இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக செயல்படுவதாக ட்விட்டரில் அறிவித்தார்.
ட்விட்டரில் இது குறித்து வெளியிட்ட பதிவில், இந்த வாய்ப்பையும் கவுரவத்தையும் கொடுத்ததற்கு ஸ்கை கிரிக்கெட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தினேஷ் கார்த்திக் ட்வீட்
One MASSIVE announcement before the IPL as a player starts...
— DK (@DineshKarthik) March 30, 2023
So proud to be amongst these legends. Surreal feeling.
Just felt like sharing!
Bas. That's all 😊☺️
Thanks @SkyCricket for giving me this opportunity and honour. #Ashes2023 pic.twitter.com/bnYyLDOV0E