Page Loader
அதிர்ச்சி தகவல்; ஜப்பான் பேட்மிண்டன் வீராங்கனைக்கு இந்தியாவில் நடந்த துயரம்
ஜப்பான் பேட்மிண்டன் வீராங்கனைக்கு இந்தியாவில் நடந்த துயரம்

அதிர்ச்சி தகவல்; ஜப்பான் பேட்மிண்டன் வீராங்கனைக்கு இந்தியாவில் நடந்த துயரம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 13, 2023
05:29 pm

செய்தி முன்னோட்டம்

ஒடிசா ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 100 போட்டிக்காக இந்தியா வந்த முன்னாள் பேட்மிண்டன் உலக சாம்பியனான நோசோமி ஒகுஹாரா தனக்கு நேர்ந்த சோக சம்பவத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். டெல்லியின் ஐஜிஐ விமான நிலையத்தில், சம்பந்தமில்லாத ஒருவர் பொருட்களை தனது அனுமதியின்றி தள்ளுவண்டியில் ஏற்ற முயன்ற சம்பவமும், பத்து நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு வழக்கமான கட்டணத்தை விட 10 மடங்கு கட்டணத்தை அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக பறித்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கட்டாகிலும், ஹோட்டலில் அறை கிடைக்காமல் நான்கு மணிநேரம் தவித்ததாகவும் தெரிவித்துள்ள அவர், போட்டி அமைப்பாளர்கள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனினும், அதன் பின்னர் பிவி சிந்து மற்றும் பிரணாய் எச்.எஸ். போன்ற வீரர்கள் மூலம் உதவி பெற்றுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Embed