
மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் பட்டம் வென்றது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமையன்று (நவம்பர் 12) நடைபெற்ற மகளிர் பிக் பாஷ் லீக் 2023 பட்டத்தை அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், முன்னாள் சாம்பியனான பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக மூன்று ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கைப்பற்றியது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை கேட்டி மேக் 3 ரன்களில் வெளியேறினாலும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்ட் மற்றும் தஹிலா மெக்ராத் நிலைத்து நின்று அணியை மீட்டனர்.
இருவரும் முறையே 39 மற்றும் 38 ரன்கள் எடுத்த நிலையில், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
Adelaide Strikers beats Brisbane Heat clinches WBBL 2023 Title
போராடி தோற்ற பிரிஸ்பேன் ஹீட்
126 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீராங்கனைகள் கிரேஸ் ஹாரிஸ் 15 ரன்களும் ஜார்ஜியா ரெட்மைன் 22 ரன்களும் எடுத்தனர்.
அதன் பின்னர் அமெலியா கெர் 30 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினாலும், அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி போராடி தோல்வியைத் தழுவியது.
பிக்பாஷ் மகளிர் கிரிக்கெட் லீக் தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் இரண்டாவது முறையாக பட்டம் வென்றுள்ளது.