அடுத்த செய்திக் கட்டுரை

மார்ச் 4 முதல் 26 ஆம் தேதி வரை! மகளிர் ஐபிஎல்லின் முழு போட்டி அட்டவணை வெளியானது!
எழுதியவர்
Sekar Chinnappan
Feb 15, 2023
01:17 pm
செய்தி முன்னோட்டம்
மார்ச் 4 ஆம் தேதி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள மகளிர் ஐபிஎல்லின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
மும்பையில் கடந்த பிப்ரவரி 13 அன்று ஏலம் நடந்த நிலையில், வீராங்கனைகள் ஏலம் முடிந்த அடுத்த நாளே போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது.
இதன் படி மொத்தம் 20 லீக் போட்டிகள் 23 நாட்கள் நடைபெறும்இதன் படி லீக் சுற்றின் இறுதிப்போட்டி மார்ச் 21 ஆம் தேதி யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
அதன் பிறகு மார்ச் 24ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும், மார்ச் 26 ஆம் தேதி இறுதிப்போட்டியும் என இரண்டு பிளேஆஃப் போட்டிகள் நடைபெறும்.
ட்விட்டர் அஞ்சல்
மகளிர் ஐபிஎல் போட்டி அட்டவணை
WPL 2023 schedule. pic.twitter.com/Rpnre7uAPI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 14, 2023