ரூ.566 கோடிக்கு அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டரை ஒப்பந்தம் செய்தது லிவர்பூல்
பிரீமியர் லீக் கிளப் அணிகளில் ஒன்றான லிவர்பூல், பிரைட்டனில் இருந்து மிட்பீல்டர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டரை ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு பிபா உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியில் இடம் பெற்றிருந்த அலெக்சிஸ் மேக் அலிஸ்டருக்கு ஊதியமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.566 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிவர்பூல் கால்பந்து கிளப் அணியில் இணைந்தது குறித்து பேசியுள்ள அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், "எனது கனவு நனவாகியுள்ளது. லிவர்பூல் அணிக்காக விரைவில் களமிறங்க ஆர்வமாக உள்ளேன்." என்று கூறினார். இந்த ஆண்டில் ஜேம்ஸ் மில்னர், நேபி கெய்டா மற்றும் அலெக்ஸ் ஆக்ஸ்லேட்-சேம்பர்லெய்ன் ஆகியோர் லிவர்பூல் அணியிலிருந்து விலகும் நிலையில், அலிஸ்டரின் வருகை மிட்பீல்டில் அணிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.