ஹாலிவுட் நடிகர்களின் இசை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது பாரிஸ் ஒலிம்பிக்
16 நாட்கள் நடந்த இடைவிடாத போட்டிகளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) ஸ்டேட் டி பிரான்சில் பளபளப்பான நிறைவு விழாவுடன், 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாரிஸ் விடைகொடுத்தது. 80,000 பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்த நிறைவு விழா பாரம்பரிய ஒலிம்பிக் கீதம் மற்றும் போட்டியை நடத்தும் பிரான்சின் தேசிய கீதத்துடன் தொடங்கியது. பின்னர் 205 அணிகளின் கொடி ஏந்திய வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதில் ஆறு பதக்கங்களை வென்ற இந்திய அணிக்காக மனு பாக்கர் மற்றும் பிஆர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் பெருமையுடன் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றனர். ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் தங்கள் திறனை வெளிப்படுத்தி கூட்டத்தினரை மகிழ்வித்தனர்.