
'பறப்பதில் முதல்படி விழுவதுதான்' : சிஎஸ்கே தோல்விக்கு பின் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 37வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். வியாழக்கிழமை (ஏப்ரல் 27) நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 202 ரன்கள் குவித்தது. இரண்டாவது பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், "பறப்பதில் முதல்படி விழுவதுதான்... சிலர் விழுவதே தரையினை இடித்திடதான் சென்னை சூப்பர் கிங்ஸ் எழுவது நடந்தே தீரும்" என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஹர்பஜன் சிங் ட்வீட்
பறப்பதில் முதல்படி விழுவதுதான்…
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 27, 2023
சிலர் விழுவதே தரையினை இடித்திடதான் @ChennaiIPL
எழுவது நடந்தே தீரும் #IPL2O23#CSKvsRR @IPL @rajasthanroyals #CSK