Page Loader
திடீரென தலைவரையே பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்! காரணம் என்ன?
1300 பேர் பணி நீக்கத்துக்குன் பின் தலைவரையே தூக்கிய ஜூம் நிறுவனம்

திடீரென தலைவரையே பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்! காரணம் என்ன?

எழுதியவர் Siranjeevi
Mar 07, 2023
09:11 am

செய்தி முன்னோட்டம்

வீடியோ கான்ஃபரன்சிங் தளமான ஜூம் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 1300 பணியாளர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், எவ்வித காரணமுமின்றி அதன் தலைவர் Greg Tomb-ஐப் பணி நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Greg Tomb குறிப்பிட்ட காரணத்திற்காக உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அவருக்கான Severance pay பணி நியமன ஆணைப்படி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், தொழிலதிபரும் முன்னாள் கூகுள் ஊழியருமான Greg Tomb, 2022 ஜூன் மாதம் பதவியேற்றார். அதன் பிறகு, நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு Greg Tomb தீவிரமாக பணியாற்றிய நிலையில், தற்போது திடீரென அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ஜூம் நிறுவனம்

தலைவரையே பணி நீக்கம் செய்த ஜூம் நிறுவனம் - காரணம் இதுவா?

வீடியோ கான்பிரன்சிங் சேவையில் முன்னணி நிறுவனமாக இருந்த ஜூம் நிறுவனம், லாக்டவுன் காலத்தில் ஜூம் செயலி தான் பல பேருக்கு பெரிய அளவில் உதவியது. உலகளவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் அனைத்தும் ஜூம் தளத்தை தான் அதிகாரப்பூர்வ வீடியோ கான்பிரென்சிங் தளமாக பயன்படுத்தி வருகிறது. எனவே, லாக்டவுன்-க்கு பின்பு போட்டி நிறுவனங்களின் வருகை காரணமாகவும், கட்டணம் வசூலிக்கும் காரணத்தாலும் ஜூம் தளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைய துவங்கியதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போது, வேறு தலைவரை அப்பதவியில் அமர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்று ஜூம் நிறுவனம் தெரிவித்துள்ளது.