Page Loader
சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம்
Xiaomi TV Stick 4K இந்தியாவில் ரூ.4, 999 க்கு அறிமுகம் செய்ய உள்ளது

சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம்

எழுதியவர் Siranjeevi
Feb 15, 2023
03:08 pm

செய்தி முன்னோட்டம்

சீன நிறுவனமான சியோமி நிறுவத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. பட்ஜெட் விலையில் தரமான சாதனங்களை வெளியிடும் இவர்கள் தற்போது புதிய சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடலை அறிமுகம் செய்துள்ளது. எனவே, சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். Xiaomi TV Stick 4K அம்சங்கள் புதிய சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடல் ஆனது தரமான டால்பி விஷன் ஆதரவு, டால்பி அட்மோஸ் மற்றும் பில்ட்-இன் குரோம்காம்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்துடன் வந்த ரிமோட் மாடலும் மிகவும் அருமையாக உள்ளது. மேலும், நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, எம்ஐ வாய்ஸ் ரிமோட் வழங்கப்படுகிறது.

சியோமி டிவி ஸ்டிக் 4கே

இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகமாகும் Xiaomi TV Stick 4K அம்சங்கள்

குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ35 பிராசஸர் உடன் ARM மாலி G31 MP2 GPU ஆதரவு இதில் உள்ளது. டூயல் பேண்ட் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. விலைக்கு ஏற்ற தரம் உள்ளதா? எச்டிஎம்ஐ மற்றும் ப்ளூடூத் 5.0 வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உங்களின் ஸ்மார்ட் டிவியில் இந்த சாதனத்தை பயன்படுத்தி 4கே தரத்தில் திரைப்படங்களைப் பார்க்க முடியும். அதிலும், பிரைம் வீடியோ, நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பார்க்க பயனளிக்கும். விலை விபரம் இந்தியாவில் Xiaomi TV Stick 4K ஆனது ரூ.4,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு எம்ஐ வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது.