Loading...
வாஷிங் மெஷினில் துவைத்தாலும் வீணாகாது; ஆடைகளில் போனைப் பயன்படுத்தும் புதிய டச்ஸ்கிரீன் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
ஆடைகளில் போனைப் பயன்படுத்தும் புதிய டச்ஸ்கிரீன் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

வாஷிங் மெஷினில் துவைத்தாலும் வீணாகாது; ஆடைகளில் போனைப் பயன்படுத்தும் புதிய டச்ஸ்கிரீன் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
06:00 pm

செய்தி முன்னோட்டம்

ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தும் தொடுதிரை (Touchscreen) வசதியை இனி நாம் அணியும் ஆடைகளிலேயே பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (NUS) பொறியியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். ஆடைகளின் கை சட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொடுதிரையானது, படங்கள் மற்றும் வீடியோக்களைக் காண்பிப்பதுடன் விரல்களின் தொடுதலுக்கும் ஸ்மார்ட்போன் போலத் துல்லியமாகப் பதிலளிக்கிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

மைக்ரோசிப்

54 எலக்ட்ரானிக் பைபர்கள் மற்றும் 5,000 மைக்ரோ சிப்கள்

பொருளறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் துரல் குதியெவ் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், சாதாரண நூல்களைப் போலவே எலக்ட்ரானிக் பிளாக்குகளை இழைகளாக (Electronic Fibres) மாற்றியுள்ளனர்.

1 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட 54 இழைகளில், 5,000-க்கும் மேற்பட்ட நுண் சில்லுகளையும் 20,000-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளையும் லேசர் மற்றும் சால்டரிங் தொழில்நுட்பம் மூலம் இணைத்து இந்த 168 mm x 105 mm அளவிலான நெகிழ்வான தொடுதிரையை உருவாக்கியுள்ளனர்.

வசதிகள்

வீடியோக்கள், உடல் வெப்பநிலை மற்றும் புளூடூத் வசதி

இந்த தொடுதிரை ஆடை மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க முடியும்.

மேலும் இதில் கால்குலேட்டர் இயக்கம், திசைகாட்டி, குரல் வழிக் கட்டுப்பாடுகள் மற்றும் புளூடூத் வழியாக படங்களை பெற்றுத் திரையின் வெளிச்சத்தை தானாகவே மாற்றி அமைக்கும் அம்சங்கள் உள்ளன.

உடலின் கக்கத்தின் கீழ் வைக்கப்படும் சென்சார் மூலம் உடலின் வெப்பநிலையைக் துல்லியமாகக் கணித்து திரையில் காட்டும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வலிமை

வாஷிங் மெஷினில் துவைத்தாலும் பழுதடையாத வலிமை

எலக்ட்ரானிக் கருவிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும், இந்த ஆடை சாதாரணப் பருத்தி மற்றும் பாலியஸ்டர் உடைகளை போலவே காற்றோட்டமாகவும், சருமத்திற்கு பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

சோப்புத் தூள் கொண்டு வாஷிங் மெஷினில் 50 முறை துவைத்த பின்னரும், 1,000 முறைக்கு மேல் பலமாக வளைத்த பின்னரும் இதன் தொடுதிரை வெளிச்சமும், தொடு உணர் திறனும் குறையாமல் அப்படியே செயல்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT