Page Loader
உலக UFO தினம்: இந்தப் பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா?
உலக UFO தினம் இன்று

உலக UFO தினம்: இந்தப் பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா?

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 02, 2023
12:12 pm

செய்தி முன்னோட்டம்

ஒவ்வொரு வருடமும் ஜூலை 2-ம் நாள் உலக UFO தினமாகக் கொண்டாடப்படுகிறது. UFO-க்கள் மற்றும் பூமியைக் கடந்து பிற கோள்களில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. UFO (Unidentified Foreign Objects) அல்லது பறக்கும் தட்டு குறித்து கடந்த 50 ஆண்டு காலமாகத் தான் அதிகம் விவாதித்து வருகிறார்கள். அமெரிக்காவில் தான் அதிகமாக, பறக்கும் தட்டுக்களைப் பார்த்ததாகப் அந்நாட்டு மக்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். 1950-களில் அமெரிக்காவில் ஆங்காங்கே பறக்கும் தட்டுக்கள் காணப்பட்டதாகக் பெறப்பட்ட தகவல்களையடுத்து, இதுபோன்ற சம்பங்களைக் குறித்து ஆய்வு செய்ய NICAP என்ற அமைப்பை நிறுவியது அமெரிக்க அரசு. ஆனால், தற்போது வரை UFO-க்கள் குறித்த அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பறக்கும் தட்டு

ஏன் ஜூலை 2-ம் நாள் கொண்டாடப்படுகிறது? 

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பகுதியில் 1947-ம் ஆண்டு ஜூலை 2-ம் நாள் பறக்கும் தட்டு ஒன்று பூமியில் மோதி சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியானது. சந்தேகப்படும் வகையிலான உலோகத் துண்டுகள் கிடைத்ததையடுத்து இப்படிக் கூறப்பட்டது. இந்த நிகழ்வை வைத்தே ஜூலை 2-ம் நாளை உலத UFO தினமாக 2001-ம் ஆண்டு முதல் கொண்டாடத் தொடங்கினார்கள் UFO ஆர்வலர்கள். இந்த தினத்தில் பிரிட்டனைச் சேர்ந்த அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் கூறிய கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது. "இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒன்று இந்த அண்டத்தில் நாம் தனியாக இல்லை அல்லது நாம் மட்டும் தான் இந்தப் பேரண்டத்தில் தனியாக இருக்கிறோம். இரண்டுமே அச்சமூட்டுவதாக இருக்கிறது"