கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்?
கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் Windfall வரியை முழுவதுமாக ரத்து செய்வதாக மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் வரி 50 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாருக்கு நன்மை அரசு லாபம் பெற்றது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். கச்சா எண்ணெய் மீதான வரியை ஒன்பது மாதம் நடைமுறையில் வைத்திருந்த மத்திய அரசு ஒரு டன்னுக்கு மட்டுமே 3,500 ரூபாயில் இருந்து முழுவதுமாக குறைத்துள்ளது. இந்த விண்ட்ஃபால் வரி ஆனது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இருக்கும் ஒன்று.
கச்சா எண்ணெய் வரியை குறைத்த அரசு - ஏற்பட்ட லாபம் என்ன?
Windfall tax-யை குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறைக்குத் திடீரென அதிகப்படியான லாபம் கிடைக்கும், போது இதில் இருந்து அரசு கூடுதலான வரி வருமானத்தைப் பெற விதிக்கப்படும் வரி தான் விண்ட்ஃபால் வரி. இந்த நிலையில், கச்சா எண்ணெய் மீது முழுமையாக அரசு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், இந்தியாவில் எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் அதன் ஏற்றுமதியில் லாபத்தை அதிகரிக்க முடியும். முதன் முதலில் ஜூலை 2022ஆம் தேதி விண்ட்பால் மீது வரி விதிக்கப்பட்டது. அப்போது 23,000 ரூபாயாக இருந்த போது இந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நிலவரப்படி டன்னுக்கு 3,500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.