நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
நிகர மதிப்பு என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் வைத்திருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு. ஒருவர் செலுத்த வேண்டிய கடன்களைக் கழித்த பின்பு இருக்கும் மொத்த சொத்து மதிப்பு தான் நிகர மதிப்பு என்று கருதப்படுகிறது. இதன் பலன் என்பது மிக பெரியது. ஒரு நிறுவனத்தின் நிதி நிலை அளவிடுவதற்கு இது ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. கணக்கிடுவது எப்படி? பணம், சேமிப்பு, முதலீடுகள், ரியல் எஸ்டேட், வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட சொத்து உட்பட உங்களின் அனைத்து சொத்துக்களின் மதிப்பையும் கூட்டவும். அவற்றின் தற்போதைய சந்தை மதிப்புகளைப் பயன்படுத்தவும். அடமானங்கள், கடன்கள், கிரெடிட் கார்டு நிலுவைகள் மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய மற்ற கடன்கள் உட்பட உங்களின் அனைத்து பொறுப்புகளின் மதிப்பையும் சேர்க்கவும்.
உங்கள் நிகர மதிப்பை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய காரணங்கள்
இறுதியில், உங்கள் நிகர மதிப்பைப் பெற, உங்கள் மொத்த சொத்துக்களிலிருந்து உங்கள் மொத்தப் பொறுப்புகளைக் கழிக்கவும். இங்கு, உங்கள் நிகர மதிப்பை அறிந்துகொள்வது, நீங்கள் செலவினங்களைக் குறைக்க அல்லது உங்கள் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய பகுதிகளைக் கண்டறிய உதவும். இதில், முக்கியமாக ஒரு வீட்டை வாங்குவது போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு, உங்கள் நிகர மதிப்பை அறிந்துகொள்வது, முன்பணமாக எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை தீர்மானிக்க உதவும். கடைசியாக, உங்கள் நிகர மதிப்பை அறிந்துகொள்வதன் மூலம், நீங்கள் யதார்த்தமான ஓய்வூதிய இலக்குகளை அமைக்கலாம். உங்களின் நிகர மதிப்பின் அடிப்படையில் ஓய்வுக்குப் பின் உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை நீங்கள் கணித்து அதற்கேற்ப திட்டமிடுங்கள்.