ட்விட்டருக்கு மாற்றாக இருக்குமா த்ரெட்ஸ்? பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள த்ரெட்ஸ் செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அது விரைவில் ட்விட்டருக்கு மாற்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022இல் எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு அதில் பல மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார்.
முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட பல சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து, பணம் செலுத்தி சேவையை பயன்படுத்தும் முறைக்கு அதை மாற்றி வந்ததால், ட்விட்டருக்கு மாற்றாக வேறு சமூக வலைதளத்தை பயனர்கள் எதிர்நோக்கி இருந்தனர்.
இந்தியாவின் 'கூ' செயலி உள்ளிட்ட பல மாற்றுக்கள் வந்தாலும், அவை ட்விட்டரை ஈடு செய்யவில்லை.
இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளை வழங்கும் மெட்டாவும், இந்த கோதாவில் குதித்துள்ளது.
how to joind threads app
த்ரெட்ஸ் செயலியில் இணைவது எப்படி?
இன்ஸ்டாகிராமின் கணக்கை பயன்படுத்தி மட்டுமே த்ரெட்ஸ் செயலியில் கணக்கு தொடங்க முடியும். மேலும் த்ரெட்ஸ் கணக்கை மூட வேண்டும் என்றால், ஒட்டுமொத்தமாக இன்ஸ்டாகிராம் கணக்கும் செயல் இழந்து விடும்.
இது தவிர த்ரெட்ஸில் ஹாஷ்டாக், ட்ரெண்டிங் போன்ற அம்சங்கள் இல்லை. மேலும் இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படுவதால், பொழுதுபோக்கு அம்சங்கள் தான் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் ட்விட்டர் முழுக்க முழுக்க சமூக மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு த்ரெட்ஸில் அடிப்படையான வசதிகள் மட்டுமே இருந்தாலும், விரைவில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.