Loading...
16TB ஸ்டோரேஜுக்கு மட்டும் ₹6.67 லட்சமா; ஆப்பிளின் புதிய டச்ஸ்கிரீன் மேக்புக் புரோ; திகைக்க வைக்கும் விலை
ஆப்பிளின் புதிய டச்ஸ்கிரீன் மேக்புக் புரோ அறிமுகம்

16TB ஸ்டோரேஜுக்கு மட்டும் ₹6.67 லட்சமா; ஆப்பிளின் புதிய டச்ஸ்கிரீன் மேக்புக் புரோ; திகைக்க வைக்கும் விலை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 29, 2026
06:46 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் டச்ஸ்கிரீன் திரையுடன் கூடிய மேக்புக் புரோ மடிக்கணினியை புதன்கிழமை (அக்டோபர் 28) அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. எம்5 மேக்ஸ் சிப்செட்டுடன் இயங்கும் இப்புதிய லேப்டாப்பில் 16TB எஸ்எஸ்டி சேமிப்பக விருப்பத்தை தேர்வு செய்ய மட்டும் $7,000 (சுமார் ₹6.67 லட்சம்) தனியாக வசூலிக்கப்படுகிறது. அதிகபட்ச சிறப்பம்சங்கள் கொண்ட 16-இன்ச் மாடலின் ஒட்டுமொத்த விலை $14,549 (சுமார் ₹13.87 லட்சம்) வரை உயர்ந்து தொழில்நுட்ப உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லேப்டாப் விலை அதிகரிப்பு

முந்தைய மாடல்களை விட ரூ.4 லட்சம் வரை அதிகரித்துள்ள லேப்டாப் விலை

இதற்கு முந்தைய 16-இன்ச் மேக்புக் புரோ மாடலின் அதிகபட்ச விலை $10,149 ஆக இருந்த நிலையில், புதிய டச்ஸ்கிரீன் மாடல் $4,400 (சுமார் ₹4.19 லட்சம்) கூடுதல் விலையில் வெளியாகியுள்ளது.

அடிப்படை எம்5 புரோ 14-இன்ச் மாடலின் தொடக்க விலை இந்தியாவில் ₹3,49,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் எம்5 மேக்ஸ் செயலிகளுடன் கூடிய உயர்ரக மாடல்களின் ஆரம்ப விலை ₹5,49,900 முதல் தொடங்குகிறது.

நானோ-டெக்ஸ்டர் கிளாஸ் திரைக்கு மட்டும் தனியாக ₹14,295 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டண உயர்வுக்குக் காரணம்

சேமிப்பகக் கட்டணம் இவ்வளவு உயர்ந்து காணப்பட முக்கியக் காரணம் என்ன?

உயர்தர 8கே வீடியோ எடிட்டிங், 3D கிராபிக்ஸ் வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை இயக்கும் நிபுணர்களை இலக்காகக் கொண்டு இந்த சேமிப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நினைவகப் பொருள்களின் கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது.

அதேநேரத்தில் ஏஐ உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக அதிவேக எஸ்எஸ்டி டிரைவ்களுக்கான தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இத்தகைய உலகளாவிய தேவை மற்றும் உற்பத்திச் செலவு உயர்வு காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் 16TB சேமிப்பகத்திற்கு இவ்வளவு அதிகக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

ADVERTISEMENT

செயல்திறன்

PROLED XDR திரை மற்றும் எம்5 மேக்ஸ் பிராஸசரின் அபார திறன்

இந்த புதிய மேக்புக் புரோவில் PROLED XDR தொடுதிரை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 18-கோர் சிபியூ மற்றும் 40-கோர் ஜிபியூ கொண்ட சக்திவாய்ந்த எம்5 மேக்ஸ் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் 128GB யுனிஃபைடு நினைவகம் பெற விரும்புவோர் தனியாக $2,000 (சுமார் ₹1.91 லட்சம்) செலுத்த வேண்டும்.

நவம்பர் மாதம் முதல் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வரும் இந்த புதிய மேக்புக் புரோவிற்கான முன்பதிவுகள் தற்பொழுது ஆப்பிள் இணையதளத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT