வாட்ஸ்அப்பில் மீடியா, செய்தித் தேடலில் தேர்ச்சி பெற இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
வாட்ஸ்அப் ஒரு முக்கிய தகவல் தொடர்பு கருவியாக மாறியுள்ளது. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் நம்மை இணைக்கிறது. இந்த தொடர்ச்சியான தொடர்பு செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களின் ஒரு பெரிய காப்பகத்தை உருவாக்குகிறது. எனவே, வாரங்களுக்கு முன்பிருந்த ஒரு குறிப்பிட்ட நினைவு அல்லது முக்கியமான திட்டக் கோப்பைக் கண்டறிவது கடினமானதாகத் தோன்றலாம். அதிர்ஷ்டவசமாக, வாட்ஸ்அப்பின் யூசர் ஃப்ரன்ட்லி மற்றும் வலுவான தேடல் அம்சங்கள் உங்களுக்குத் தேவையான மீடியாவை விரைவாகவும் திறமையாகவும் கண்டறிய உதவுகின்றன.
முக்கிய வார்த்தை மற்றும் தேதி மூலம் தேடுவது எப்படி
தேடல் அம்சம் முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி செய்திகளைக் கண்டறிய உதவுகிறது. அரட்டைகள் தாவலில், தேடல் பட்டியைத் தட்டி, உங்கள் முக்கிய சொல்லைத் தட்டச்சு செய்து, அரட்டையில் அதைப் பார்க்க முடிவைத் தேர்ந்தெடுக்கவும். வசதிக்காக தனிப்பட்ட அல்லது குழு அரட்டைகளில் இதேபோல் தேடலாம். தனிப்பட்ட அல்லது குழு அரட்டையில் தேதியின்படியும் தேடலாம். அரட்டையைத் திறந்து, தேடலைத் தட்டி, விரும்பிய தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஃபில்டர்களுடன் மீடியாவைத் தேடுங்கள்
தேடல் அம்சத்தில் ஃபில்டர்களைப் பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள், இணைப்புகள், GIFகள், ஆடியோ, வாக்கெடுப்புகள் மற்றும் ஆவணங்கள் போன்ற ஊடகங்களைத் தேடலாம். இது அரட்டைகள் தாவலில் மட்டுமே வேலை செய்யும். மேலே உள்ள தேடல் பட்டியைத் தட்டவும், விரும்பிய முக்கிய சொல் அல்லது சொற்றொடரை உள்ளிட்டு, முடிவுகளை வடிகட்ட ஊடக வகையைத் தேர்ந்தெடுக்கவும். அரட்டையில் தொடர்புடைய செய்தியைத் திறக்க எந்த முடிவையும் தட்டவும்.