Page Loader
ஒரு சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகள், வாட்ஸ்அப்பின் புதிய வசதி
புதிய வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்

ஒரு சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகள், வாட்ஸ்அப்பின் புதிய வசதி

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 16, 2023
03:24 pm

செய்தி முன்னோட்டம்

வாட்ஸ்அப் நிறுவனமானது ஒரு கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பல கணக்கை ஒரே சாதனத்தில் பயன்படுத்தும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இரண்டு மொபைல் எண்களை வைத்து இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏதுவாக இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். இந்த வசதியானது வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலின் 2.23.13.5 பீட்டா வெர்ஷன் மூலம் சோதனைக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் இதன் சோதனை நடைபெற்று வந்தாலும், அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியிலும் இந்த புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பின் புதிய வசதி: 

இந்த புதிய வசதியைப் பயன்படுத்த இரண்டு பிஸிக்கல் சிம் கார்டுகளையே பயன்படுத்த வேண்டுமா அல்லது இ-சிம் பயனாளர்களுக்கு இந்த வசதியைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இ-சிம் பயனர்களும் இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் பட்சத்தில் ஐஓஎஸ் மற்றும் ப்ரீமியம் ஆண்ட்ராய்டு போன் பயனர்களும் வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். விரைவில் இந்த வசதியின் பீட்டா வெர்ஷனை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பல வசதிகளை உருவாக்கத்திலும், சில வசதிகளை பீட்டா சோதனையிலும் அந்நிறுவனம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post