
வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்; வீடியோ ஸ்டேட்டஸ் அப்டேட்டில் புதிய வசதி அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் ஸ்டேட்டஸ் அப்டேட்டில் வெளியிடும் வீடியோக்களுக்கான கால வரம்பு 60 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாக அதிகரிக்கப்பட உள்ளது.
இது பயனர்களுக்கு ஸ்டேட்டஸ் அப்டேட்களைப் பகிர்வதில் அதிக வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜிங் ஊடகமான வாட்ஸ்அப், கூகுள் பிளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா (பதிப்பு 2.25.12.9) மூலம் பீட்டா வெர்ஷனைப் பயன்படுத்தும் பய்னர்களில் தேர்தெடுத்து சிலருக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய அம்சம், பயனர்கள் முந்தைய 60-வினாடி வரம்பிற்கு ஏற்றவாறு நீண்ட வீடியோக்களை பல பிரிவுகளாக ஒழுங்கமைக்க அல்லது பிரிக்க வேண்டிய தேவையை நீக்குகிறது.
பயனர் தேவை
பயனர் தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சி
வாட்ஸ்அப் அப்டேட்களுக்கான நம்பகமான ஆதாரமான WABetaInfo படி, இந்த நடவடிக்கை ஸ்டேட்டஸ் அப்டேட் அனுபவத்தை மேம்படுத்தவும் நீண்ட உள்ளடக்க வடிவங்களுக்கான வளர்ந்து வரும் பயனர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தளத்தின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.
இந்த அப்டேட் கடந்த ஆண்டு மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அப்போது, ஏற்கனவே இருந்த வீடியோ ஸ்டேட்டஸ் வரம்பை 30 வினாடிகளில் இருந்து ஒரு நிமிடமாக நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த மாற்றத்திற்கான நேர்மறையான வரவேற்பு வாட்ஸ்அப் வரம்புகளை மேலும் அதிகரிக்க ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.
இந்த அம்சத்தை வெளியிடுவது பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது, மேலும் அனைத்து பீட்டா சோதனையாளர்களுக்கும் இன்னும் கிடைக்கவில்லை.