அக்டோபர் இறுதிக்குள் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் WhatsApp செயல்படாது
அக்டோபர் 24 தேதி வரை தான், குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் வாட்ஸ்அப் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள், பயனர்கள் தங்கள் சாதனங்களை மேம்படுத்திட வேண்டும், இல்லையேல், இந்த செயலியினை உபயோகப்படுத்த இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Android 4.1 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் மொபைல் சாதனங்களை குறிப்பிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. தற்சமயம் இந்த பாதிப்புகளை உள்ளடக்கி, Samsung , HTC, Sony மற்றும் Motorola போன்ற போன்கள் இயங்கி வருகின்றன. வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் புதிய ஆண்ட்ராய்டு பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு மாற வேண்டும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதரவை நிறுத்தும் வாட்சப் அறிவிப்பு
பழைய மொபைல் போன்களில் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவதற்கான காரணமாக, வாட்ஸ்அப், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள காலாவதியான வன்பொருள் மற்றும் இயக்க முறைமைகளை குறிப்பிடுகிறது. மறுபுறம், Google நிறுவனமும், தன்னுடைய பாதுகாப்பு புதுப்பிப்புகளை பழைய ஆண்ட்ராய்டு பாதிப்பை கொண்டு இயங்கும் மொபைல்களுக்கு வழங்குவதில்லை. இதனால் பாதுகாப்பு மீறல்கள் மற்றும் பிற சிக்கல்கள் அதிகமாக ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயனர் அனுபவத்திற்காக இத்தகைய நடவடிக்கையை, வாட்ஸ்அப் மேற்கொண்டுள்ளது.
WhatsApp ஆதரவை இழக்கும் பாதிக்கப்பட்ட சாதனங்களின் பட்டியல்
Samsung Galaxy S2, HTC One, Sony Xperia Z, LG Optimus G Pro, HTC Sensation, Samsung Galaxy S, HTC Desire HD, Motorola Xoom, Samsung Galaxy Tab 10.1 மற்றும் Nexus 7 ஆகியவை WhatsApp ஆதரவை இழக்கும் சில மொபைல் போன்களாகும். WhatsApp மற்றும் Google வழங்கும் சமீபத்திய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை இந்தப் பழைய சாதனங்களால் கையாள முடியாது. இது வாட்சப் நிறுவனம் மற்றும் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பு அச்சத்தை உண்டாக்கும். இதுமட்டுமின்றி, வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் பல AI சார்ந்த அம்சங்களை இயக்க, உங்கள் போனிலில் தேவையான புதுப்பித்த இயக்க முறைமைகள் அவசியமாகிறது