மொபைல் எண்ணைக் கொண்டு கணினியில் லிங்க் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தவும், எளிமையாக்கவும் பல்வேறு புதிய வசதிகளை சோதனை செய்தும், அறிமுகப்படுத்தியும் வருகிறது. உயர்தர காணொளிகளை வாட்ஸ்அப் தளத்தில் பகிரும் வகையில் புதிய பீட்டா வெர்ஷன் ஒன்றை கடந்த மாதம் அந்நிறுவனம் வெளியிட்ட நிலையில், தற்போது புதிய வசதியுடன் கூடிய பீட்ட வெர்ஷன் ஒன்றை வெளியிட்டிரு வருகிறது வாட்ஸ்அப். இதுவரை கணினியில் வாட்ஸ்அப் வெப்புடன் வாட்ஸ்அப் சேவையைப் லிங்க் செய்ய, QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலமே செய்யப்பட்டு வந்தது. தற்போது, மொபைல் எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் வெப்பில் லிங்க் செய்யும் புதிய வசதியை பீட்டா வெர்ஷனை மூலம் சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப்.
எப்படி மொபைல் எண்ணைப் பயன்படுத்தி லாகின் செய்வது?
கணினியில் வாட்ஸ்அப் வெப்பை திறந்து அதில் 'Link with phone number' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதன் பின் தோன்றும் பக்கத்தில் நம்முடைய வாட்ஸ்அப் எண்ணை உள்ளிட வேண்டும். இதனைத் தொடர்ந்து, எட்டு இலக்க எண் ஒன்று கணினித் திரையில் தோன்றும். அதனை நம்முடைய ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பில் செயலியில் உள்ளிட வேண்டும். இந்த முறையைப் பயன்படுத்தியும் வாட்ஸ்அப் வெப்பில் லிங்க் செய்யும் வசதியைத் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. விரைவில் இந்த வசதியை அனைத்து பயனர்களுக்கும் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.