வாட்ஸ்அப் சேனல்களுக்கு பிரத்தியேக பயனாளர் பெயர்கள், சோதனையில் புதிய அப்டேட்
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் சேனல்ஸ் அப்டேட் ஒன்றுடன் புதிய பீட்டா வெர்ஷன் ஒன்றை சோதனைக்காக வெளியிட்டிருக்கிறது வாட்ஸ்அப். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகளவில் பல்வேறு பயனாளர்களுக்கும் சேனல்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது வாட்ஸ்அப் நிறுவனம்.
எக்ஸைப் போல பிரத்தியேமான பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வசதியுடன் இந்த சேனல்ஸ் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால், சேனல்ஸ் வசதியை அறிமுகப்படுத்தி போது அப்படி பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையிலான வசதி எதனையும் வாட்ஸ்அப் அளிக்கவில்லை.
தற்போது 2.23.24.17 என்ற வெர்ஷனில் வாட்ஸ்அப் சேனல்களுக்கு பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையிலான அந்தப் புதிய வசதியை அளித்திருக்கிறது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப்
பயனாளர் பெயருடன் வாட்ஸ்அப் சேனல்கள்:
தற்போது வாட்ஸ்அப் சேனல்களானது பொதுப் பெயருடனேயே இயங்கி வருகின்றன. அதாவது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களுடைய சேனல்களுக்கு வைத்திருக்கும் பெயரை பிற வாட்ஸ்அப் சேனல்களும் வைத்துக்கொள்ள முடியும்.
ஆனால், அப்படி இல்லாமல் பிரத்தியேமான பயனாளர் பெயர் வசதியானது குறிப்பிட்ட வாட்ஸ்அப் சேனல் பயன்படுத்தி பெயரை வேறு ஒருவர் மீண்டும் பயன்படுத்த முடியாத வகையிலான தனியுரிமையைக் கொடுக்கும்.
ஒரு குறிப்பிட்ட பயனாளர் பெயரில் நம்முடைய வாட்ஸ்அப் சேனல் மட்டுமே இயங்கி வரும் என்பதால், நம்முடைய வாடிக்கையாளர்கள் மற்றும் பயனாளர்களுக்கும் நம் சேனலைக் கண்டறிவது எளிதாக இருக்கும்.
இந்த வசதியை பீட்டா வெர்ஷன் மூலம் வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் நிலையில், தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளுக்கும் பயனாளர்கள் பெயர்கள் வசதியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.