வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் ஆண்ட்ராய்டு 4.0 மற்றும் ஐஓஎஸ் 11க்கு முந்தைய மாடல்களுக்கு சிக்கல்
வாட்ஸ்அப் தனது செயலியை அவ்வப்போது புதுப்பித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில பழைய மாடல்களுக்கான சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அடுத்து வரவுள்ள வாட்ஸ்அப் அப்டேட்டில் ஆண்ட்ராய்டு 4.0க்கு முந்தைய வெர்ஷன்கள் மற்றும் ஐஓஎஸ் 11க்கு முந்தைய வெர்ஷன்களில் இனி சேவை நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ஓஎஸ் பயன்படுத்துபவர்கள் தங்கள் மொபைல் ஓஎஸ்ஸை அப்கிரேட் செய்தால் மட்டுமே வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே மேலே குறிப்பிட்ட ஓஎஸ்ஸிற்கு முந்தைய வெர்ஷன்களை பயன்படுத்துபவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்தால், அவர்கள் உடனடியாக தங்களது சாட் ஹிஸ்டரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுமார் 35 போன்களில் வாட்ஸ்அப் இனி இயங்காது
வாட்ஸ்அப்பின் இந்த அப்டேட்டால் எந்தெந்த போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு என்பது அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படவில்லை. எனினும், இதுதொடர்பாக கசிந்த ஒரு அறிக்கையின்படி, சுமார் 35 தொலைபேசி மாடல்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என தெரிய வந்துள்ளது. இதில் சாம்சங், ஆப்பிள், மோட்டோரோலா, சோனி, எல்ஜி மற்றும் ஹவாய் போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் சாதனங்களும் அடங்கும். குறிப்பாக சாம்சங்கில் நிறையை கேலக்சி மாடல் போன்களும், ஐபோனில் 5, 6, 6S மற்றும் SE மாடல்களில் இனி வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது. இதனால் ஏற்படும் டேட்டா இழப்பை தவிர்க்க உடனடியாக கூகுள் ட்ரைவ் அல்லது கிளவுட் ட்ரைவ் போன்றவற்றில் பேக்கப் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.