மேக் டெஸ்க்டாப் செயலியில் புதிய கீபோர்டு ஷார்ட்கட்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் அதன் மேக் டெஸ்க்டாப் செயலியில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் புதிய கீபோர்டு ஷார்ட்கட்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மெனு பார் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தற்போது குறிப்பிட்ட சில பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது இது, வரும் வாரங்களில் அதிகமான பயனர்களுக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது. புதிய கீபோர்டு ஷார்ட்கட் வசதியை அதிகரிக்கவும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் செயல்பாடுகளை விரைவாக அணுகவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த ஷார்ட்கட்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது மற்றும் சாட்களுக்குள் எளிமையாக நுழைவதற்கு ஏற்ற கீபோர்டு ஷார்ட்கட்களை கொண்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மெனு பார்
புதிய கீபோர்டு ஷார்ட்கட்களைத் தவிர, மேக்கிற்கான சமீபத்திய அப்டேட்டில், செயலியில் மெனு பாரும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் பல்வேறு விருப்பங்களைக் கண்டறிந்து பயன்படுத்துவது இதில் எளிதாக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த அம்சங்களைப் பெறாத பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சமீபகாலமாக, டெஸ்க்டாப் செயலியை மேம்படுத்துவதில் வாட்ஸ்அப் கவனம் செலுத்தி வருகிறது. பயனர்களின் கருத்தைப் பெறுவதன் மூலமும், குறைபாடுகளைச் சரிசெய்து செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அதைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. கூடுதலாக, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளுக்கான பல புதிய அம்சங்களையும் உருவாக்கி வருகிறது. இதுதவிர சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சேனல்களிலும் புதிய அம்சங்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.