புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப்...
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் 2.24 பில்லியன் பயனர்களைக் கொண்ட ஒரு குறுஞ்செய்தி சேவைத்தளம் வாட்ஸ்அப். பயனர்களின் வசதிக்காக தொடர்ந்து பல புதிய வசதிகளை அந்நிறுவனம் வெளியிடுது வழக்கம்.
தற்போது பயனர்களின் பயன்பாட்டிற்காக புதிய வசதிளை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. என்னென்ன வசதிகள் வெளியாகியிருக்கின்றன?
இதற்கு முன்னர் ஃபார்வர்டு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நம்மால் கேப்ஷன்களை இட முடியாது.
தற்போது ஃபார்வர்டு செய்யும் புகைப்படங்கள் மற்றம் வீடியோக்களுக்களுக்கும் கேப்ஷன்கள் இடும் வசதியை கொண்டு வந்திருக்கிறது வாட்ஸ்அப்.
அதேபோல், பிடிஎஃப் அல்லது இதர வகை ஆவணங்களுக்கும் கேப்ஷன்கள் இட்டு அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம் அது என்ன ஆவணம் என்பது குறித்த கேப்ஷனை இட்டு அனுப்புபவருக்கு தெளிவுபடுத்த முடியும் என அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
வாட்ஸ்அப்
போல் வசதியில் புதிய அப்டேட்கள்:
அதே போல் முடிவுகள் எடுப்பதற்கு வாட்ஸ்அப் குழுவில் இருப்பவர்களின் கருத்துக்களைக் கேட்கும் வகையில் போல்ஸ் வசதியை கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப். அந்த வசதியில் தற்போது சில புதிய அப்டேட்களை சேர்த்திருக்கிறது அந்நிறுவனம்.
பல ஆப்ஷன்கள் கொண்ட போல்களை மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்த நிலையில், ஒரேயொரு ஆப்ஷன் கொண்ட போலையும் இனி வாட்ஸ்அப் பயனர்கள் பயன்படுத்த முடியும்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் போலவே இனி போல்களையும் தேடி எடுக்கும் வகையில் ஃபில்டரில் போல் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
குழுவில் நாம் பதிவிட்ட போலுக்கு யாரும் வாக்களித்தால், அது குறித்த நோட்டிபிகேஷன் வரும் வகையில் புதிய வசதியைச் சேர்த்திருக்கிறது வாட்ஸ்அப். அதே போல் எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்ற தகவலையும் பார்க்க முடியுமாம்.