வாட்ஸ்அப்பில் புதிய சாட் 'லாக் வசதி'.. அறிமுகப்படுத்தியது மெட்டா!
வாட்ஸ்அப் செயலியில் புதிய 'சாட் லாக்' வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதாக தங்களது வலைப்பதிவில் அறிவித்திருக்கிறது மெட்டா நிறுவனம். பயனர்களின் கூடுதல் தனியுரிமைக்காக இந்தப் புதிய வசதி வழக்கப்பட்டிருப்பதாக மெட்டா குறிப்பிட்டிருக்கிறது. இந்த புதிய வசதியின் மூலம் வாட்ஸ்அப் செயலியையே மொத்தமாக லாக் செய்யாமல் குறிப்பிட்ட சாட்களை மட்டும் லாக் செய்யும் வசதியை அளித்திருக்கிறது மெட்டா. லாக் செய்யப்பட்ட சாட்கள் வாட்ஸ்அப் செயலியிலேயே தனியாக ஒரு போல்டரில் வைக்கப்பட்டிருக்கும். அந்த போல்டரை அன்லாக் செய்து சாட்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக் செய்யப்பட்ட சாட்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்களும் மறைக்கப்படுமாம். இதன் மூலம் அந்த சாட்களுக்கு வரும் குறுஞ்செய்திகளையும் பிறர் படிக்க முடியாது. இந்த வசதியை தற்போது அனைத்து பயனர்களுக்கு வெளியிட்டு வருகிறது மெட்டா.