Loading...
இனி வேறு ஆப்ஸ் எதுவுமே தேவையில்லை! வாட்ஸ்அப்பிலேயே மின்சாரம், கேஸ், தண்ணீர் கட்டணம் செலுத்தலாம்
வாட்ஸ்அப் மூலம் இனி வீட்டில் இருந்தபடியே மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்தலாம்

இனி வேறு ஆப்ஸ் எதுவுமே தேவையில்லை! வாட்ஸ்அப்பிலேயே மின்சாரம், கேஸ், தண்ணீர் கட்டணம் செலுத்தலாம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 03, 2026
01:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்களது அன்றாட வீட்டுக் கட்டணங்களை செலுத்த வேறு எந்த செயலிக்கும் செல்ல வேண்டியதில்லை. வாட்ஸ்அப் செயலியிலிருந்து வெளியேறாமலேயே மின்சாரம், குடிநீர், கேஸ் உள்ளிட்ட கட்டணங்களை நேரடியாக செலுத்தும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகம் செய்துள்ளது. பயனர்களின் அன்றாட வேலைகளை ஒரே இடத்தில் எளிமையாக்கும் நோக்கில் இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாரத் கனெக்ட்

பாரத் கனெக்ட் (BBPS) இணைப்பு மற்றும் சேவைகள்

இந்த புதிய வசதி பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் (BBPS - Bharat Connect) தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது.

இதன் மூலம் மின்சாரம், கேஸ், தண்ணீர், ஃபாஸ்டேக், காப்பீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் கடன் தவணைகள் உட்பட 30 பிரிவுகளின் கீழ் இயங்கும் 22,722-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களுக்குப் பயனர்கள் நேரடியாகக் கட்டணம் செலுத்த முடியும்.

செலுத்தும் முறை

வாட்ஸ்அப்பில் கட்டணம் செலுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியைத் திறந்து முகப்புத் திரையின் மேல் பகுதியில் உள்ள '₹' குறியீட்டைத் கிளிக் செய்ய வேண்டும்.

அதில் பில் கட்டணப் பிரிவைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கான சேவை நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் கணக்கு விவரங்களை உள்ளிட்ட பிறகு, செலுத்த வேண்டிய தொகையை சரிபார்த்து யுபிஐ, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் உடனடியாகக் கட்டணத்தை செலுத்தலாம்.

ADVERTISEMENT

வசதிகள்

பயனர்களுக்கான கூடுதல் வசதிகள் மற்றும் வெளியீடு

ஒரே சேவை நிறுவனத்தில் வீடு மற்றும் அலுவலகத்திற்குப் வெவ்வேறு கணக்குகள் இருந்தால், அவற்றை ஒரே இடத்தில் சேமித்து நிர்வகிக்கும் வசதியும் இதில் உள்ளது.

பயனர்கள் முன்பு செலுத்திய கட்டண விவரங்கள் 'Payments Home' பிரிவில் சேமிக்கப்படும்.

இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்குப் படிப்படியாகக் கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT