IOS செயலியில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப்
ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கான வாட்ஸ்அப் செயலியில் மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். வீடியோ காலின் போது லேண்டுஸ்கேப் மோடிலும் பயன்படுத்தும் வசதி, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்பை அமைதியாக்கும் Silence Unknown Caller வசதி மற்றும் கிளவுடு சேவையின் தேவையின்றி, இரு சாதனங்களுக்குள்ளேயே சாட் ஹிஸ்டரியை பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி ஆகிய மூன்று வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப். அடுத்து வரும் வாரங்களில் இது அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் வெளியிடப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. முன்னதாக, 15 நபர்களுடன் வீடியோ காலை தொடங்கும் வசதி மற்றும் உயர்தர புகைப்படங்களை அனுப்பும் வசதி ஆகிய வசதிகளை, ஐஓஎஸ் பீட்டாவில் அந்நிறுவனம் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.