சேனல்களில் ஆட்டோமேட்டிக் ஆல்பம் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் சாட்கள் மற்றும் குரூப்களில் இருந்து வந்த ஆட்டோமேட்டிக் ஆல்பம் வசதியை சேனல்களுக்கும் அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். இந்த வசதியை 2.23.26.16 என்ற பீட்டா வெர்ஷனில் சோதனைக்காக வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த ஆட்டோமேட்டிக் ஆல்பம் வசதியுடன், சேனல்களில் சேனல் ஓனர்கள் பகிரும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு ஆல்பம் போல காட்சியளிக்கும். இது தானியக்க முறையில் நடைபெறும் செயல்முறையாகும். இந்த வசதியை அறிமுகப்படுத்துவதன் மூலம், வாட்ஸ்அப் சேனல்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த முடியும் எனத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப். இது சேனல் ஓனர்கள் மட்டுமின்றி பயனாளர்ளுக்கும் சேனல் பயன்பாட்டை சிறப்பான ஒன்றாக மாற்றும் எனக் குறிப்பிட்டிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.