Page Loader
IOS-ல் 15 தொடர்புகளுடன் வீடியோ காலிங் வசதியை மேம்படுத்திய வாட்ஸ்அப்
IOS-ல் 15 தொடர்புகளுடன் வீடியோ காலிங் வசதியை மேம்படுத்திய வாட்ஸ்அப்

IOS-ல் 15 தொடர்புகளுடன் வீடியோ காலிங் வசதியை மேம்படுத்திய வாட்ஸ்அப்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 23, 2023
04:29 pm

செய்தி முன்னோட்டம்

ஐஓஎஸ் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இருக்கும் வசதியில் புதிய மேம்பாடு ஒன்றைச் செய்திருக்கிறது அந்நிறுவனம். முன்பு வாட்ஸ்அப்பில் குழுவாக வீடியோ கால் செய்யும் போது, ஏழு தொடர்புகளை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஐஓஎஸ்ஸின் புதிய பீட்டா வெர்ஷனில் அதனை 15 ஆக உயர்த்தியிருக்கிறது வாட்ஸ்அப். ஒரு வீடியோ காலை தொடங்கும் போது 15 தொடர்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதன் பின்பு, 32 தொடர்புகள் வரை ஒரே வீடியோ காலில் இணைத்துக் கொள்ள முடியும். இந்தப் புதிய வசதியானது வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனான IOS 23.15.1.70-ல் சோதனைக்காக வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் ஐஓஎஸ் பயனர்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஓஎஸ் பயனாளர்களைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்தப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

IOS பீட்டாவில் வாட்ஸ்அப்பின் புதிய மேம்பாடு: