36 லட்சம் எண்களை முடக்கிய வாட்ஸ்அப்.. என்ன காரணம்?
சில வாரங்களாக இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் ஸ்பேம் கால்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. பல்வேறு தரப்பினரும் இது குறித்து ட்விட்டரில் புகார் அளித்து வந்தனர். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திக்கு அறிக்கை அனுப்பவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக 36 லட்சம் எண்களை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்திருக்கிறார். இந்தியா முழுவதும் சஞ்சார் ஷாதி வலைத்தளத்தின் வெளியீட்டு விழாவில் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். வாட்ஸ்அப் நிறுவனமும் இது தொடர்பாக பத்திரிகை அறிக்கை ஒன்றில் அமைச்சருக்கு நன்றி தெரிவித்திருக்கிறது.