கிடுகிடுவென விலையேறும் தங்கம்! வல்லுநர்கள் கூறுவது என்ன?
தங்கம் விலை ஒவ்வொரு நாளும், கிடுகிடுவென உயர்ந்துகொண்டே இருக்கிறது. இது பொது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 5500 -ஐ தாண்டியுள்ளது. எனினும், முதலீட்டு வல்லுநர்கள் இந்த விலையேற்றத்தை வரவேற்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்திற்கு இது மாற்றத்தை கொண்டு வரும் எனவும் கருதுகின்றனர். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளில் வட்டி விகிதமும் ஏற்றப்பட்டுள்ளது. அதனால், தங்கத்தை ஒரு முதலீடாக வாங்குபவர்கள் எண்ணிக்கையும் கூடுகிறது. அதற்கு காரணம், வரும்காலங்களில், தங்கத்தின் விலை இன்னும் ஏறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தான்.
ஏறும் தங்கத்தின் விலை
அமெரிக்க டாலர் குறியீட்டில் வீழ்ச்சியும், சமீபத்தில்,பாங்க் ஆஃப் ஜப்பானின் கொள்கை நடவடிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களின் விலையிலும் மாற்றம் வந்தது. ஜப்பானிய யென் அமெரிக்க டாலருக்கு எதிராக 5 மாதங்களுக்கும் மேலாக உயர்ந்து விலைமதிப்பற்ற உலோகங்கள் மீது அழுத்தத்தை வைத்தது. இந்தியா பொருளாதாரம் தற்போது மந்த நிலையில் உள்ளது. எனவே இயல்பாகவே, தங்கத்தின் விலை கூடும், மக்களின் வருவாயும் குறையும், மக்களின் வாங்கும் தன்மையும் குறையும். இதனால், தங்கத்தின் தேவையும் குறையக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.