2023 புத்தாண்டு ஹோட்டல் முன்பதிவுகளில், கோவாவை முந்தியது வாரணாசி
செய்தி முன்னோட்டம்
இரு தினங்களுக்கு முன்னர், Oyo நிறுவனர் மற்றும் CEO ரித்தேஷ் அகர்வால், புத்தாண்டிற்கான ஹோட்டல் முன்பதிவுகளில், கோவாவை விட அதிகமாக வாரணாசியை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளதாக, ட்வீட் செய்தார்.
"கோவாவில் இருந்து முன்பதிவு மணிக்கணக்கில் அதிகரித்து வருகிறது. ஆனால் கோவாவை முந்திய நகரத்தை யூகிக்கவும்? வாரணாசி," என்று அவர் கூறினார்.
புத்தாண்டை கொண்டாட நினைக்கும் பெரும்பாலானோர், முதலில் தேர்வு செய்யும் இடம் கேரளா அல்லது கோவா. காரணம் அங்கிருக்கும் ரம்யமான கடற்கரை சூழல்.
ஆனால் இந்த வருடம், சற்று வித்தியாசமாக, பலர், வாரணாசியை தேர்வு செய்துள்ளனர் என்று, ஆன்லைன் ஹோட்டல் முன்பதிவு தளமான ஓயோவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரித்தேஷ் அகர்வால் பகிர்ந்து கொண்டார்.
ட்விட்டர் அஞ்சல்
ஓயோ புத்தாண்டு ஹோட்டல் முன்பதிவுகள்
Bookings from Goa are rising by the hour. But guess the city that is overtaking Goa?.
— Ritesh Agarwal (@riteshagar) December 31, 2022
Varanasi. 👀
PS: We are nearly sold out across 700+ cities globally. 🙌🏻#CheckIn2023
மேலும் படிக்க
ஓயோ ஹோட்டல் முன்பதிவுகள்
உலகளவில் 700 நகரங்களில், ஓயோ ரூம்கள் புக் செய்யப்பட்டன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓயோ, மலேசியா, இங்கிலாந்து, சீனா, இந்தோனேசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
இந்த புத்தாண்டு தினத்தன்று, உலகளவில் 450,000 க்கும் அதிகமான முன்பதிவு நடைபெற்றதாக, ஓயோ நிறுவனர் பகிர்ந்து கொண்டார். இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகம்.
வாரணாசி, கடந்த ஓராண்டில் இரண்டு பெரிய நிகழ்வுகளைக் கண்டுள்ளது - முதலாவதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி மறுவடிவமைக்கப்பட்ட கோயில் வளாகத்தைத் திறந்து வைத்தார்.
இரண்டாவது, காசி தமிழ் சங்கம் கடந்த மாதம் நடைபெற்றது.
இரண்டு நிகழ்வுகளும், வாரணாசியின் சுற்றுலாத் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன.
ட்விட்டர் அஞ்சல்
ஓயோ புத்தாண்டு ஹோட்டல் முன்பதிவுகள்
My team just informed me that 750+ cities have seen a 50% jump in bookings v/s last year. 🙌🏻 Breaking our own records by the minute! #CheckIn2023
— Ritesh Agarwal (@riteshagar) December 31, 2022