Page Loader
UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து?
2000 மேல் யூபிஐ மூலம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும்

UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து?

எழுதியவர் Siranjeevi
Mar 29, 2023
04:10 pm

செய்தி முன்னோட்டம்

இனி யூபிஐ மூலம் அதிக பண பரிமாற்றம் செய்யப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் டிஜிட்டல் பேமெண்ட்கள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இனி 2, 000 ரூபாய்க்கு மேல் UPI மூலம் பண பரிவர்த்தனைகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.1 சதவிகித கட்டணம் வசூலிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. சிறிய தொகையில் இருந்து பெரிய தொகை வரை மக்கள் அனைத்திற்கும் UPI பேமெண்ட்களை தான் தேர்வு செய்து வருகின்றனர். அசுர வளர்ச்சியை எட்டியுள்ளதால், யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

யூபிஐ பணபரிமாற்றம்

UPI எந்தெந்த பணபரிமாற்றத்திற்கு கட்டணம் வசூல் - விளக்கத்துடன் இங்கே

இதனிடையே தான் ரூ.2,000 மேல் உள்ள பணப் பரிவர்த்தனைகளுக்கு 1.1% வரை (PPI) Prepaid Payment Instrument கட்டணம் விதிக்கப்படும் எனவும் நேஷனல் பேமென்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், UPI என்பது பொதுநலனுக்காக அரசாங்கம் மக்களின் எளிய பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. ஆனால் வணிகர்களின் வாலட்டிற்கு கட்டணத்தை ஏற்றும் போது 2,000க்கு மேல் உள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு அதிக செலவினை ஏற்படுத்துகிறது. இதனால் Mobile Wallet-இல் இருந்து 2,000 அதிகமாக வியாபாரிகளுக்கு பணம் செலுத்தினால் அதற்கும் 1.1% கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.