ட்விட்டரின் அடுத்த அப்டேட்: வணிக நிறுவனங்களுக்கான ப்ளூ டிக் அறிமுகம்
இந்த 'Twitter Blue for Business ' பெற்ற நிறுவனங்களின் முக்கிய பணியாளர்கள் அனைவருக்கும், தங்கம்/நீல குறியீடுடன், சதுர பேட்ஜு தரப்படும் என்று மேலும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், வணிகத்தின் முக்கிய பணியாளர்களை அறிய அனுமதிக்கிறது. வணிகத்திற்கான ட்விட்டர் ப்ளூ-ஐ பெறும் நிறுவனங்கள், சதுர நிறுவனப் பேட்ஜுடன், தங்க நிறச் சரிபார்ப்பு அடையாளத்தைக் கொண்டிருக்கும். ட்விட்டர் ப்ளூ டிக் பெற்ற நிறுவனம், எத்தனை தனிநபர்கள் மற்றும் துணை பிராண்டுகளை வேண்டுமானாலும் இணைக்க முடியும். இணைக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் தங்கள் சுயவிவரத்தில் நீல நிற குறியீடு மற்றும் சிறிய நிறுவன பேட்ஜ் (லோகோவாக இருக்கலாம்) ஆகியவற்றைப் பெறும்.
வணிகத்திற்கான ட்விட்டர் ப்ளூ
ட்விட்டர் ப்ளூ டிக்
ட்விட்டர் ஏற்கனவே தனது சொந்த கணக்குகளுக்கான வணிகத்திற்காக Twitter Blue ஐ இணைத்துள்ளது. வணிக பிராண்டுகள், ட்விட்டரில் தனிப்பட்ட நபர்களின் பட்டியலையும், துணை பிராண்டின் பெயர்களையும் பகிர்ந்தால் மட்டுமே இது சாத்தியம். மேலும் அவர்கள் ட்விட்டர் கணக்குக்கு என ஒரு லோகோவைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இந்த வணிக ட்விட்டர் ப்ளூ டிக்கின் அதிகாரப்பூர்வமாக விலை குறித்து எந்த தகவலும் இல்லை. இதேபோல், இத்துடன் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கும் தனித்தனியாக பணம் செலுத்த வேண்டுமா என்பதில் தெளிவு இல்லை. எனினும், வழக்கமான ட்விட்டர் ப்ளூவின் விலை மாதத்திற்கு $8 என்று ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த 'Twitter Blue for Business'-இன் விலை கண்டிப்பாக கூடுதலாகவே இருக்கும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.