Page Loader
குறுகிய காலத்தில் 150 மில்லியன் பயனர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டிய 'Threads'
குறுகிய காலத்தில் 150 மில்லியன் பயனர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டிய 'Threads'

குறுகிய காலத்தில் 150 மில்லியன் பயனர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டிய 'Threads'

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 16, 2023
03:19 pm

செய்தி முன்னோட்டம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையில், ட்விட்டருக்கு போட்டியான தங்களுடைய 'த்ரெட்ஸ்' என்ற புதிய சமூக வலைத்தளத்தை வெளியிட்டது மெட்டா. இந்த புதிய சமூக வலைத்தளமானது வெளியிடப்பட்டு 2 மணி நேரத்தில் 2 மில்லியன் பயனர்களையும், 12 மணி நேரத்தில் 30 மில்லியன் பயனர்களையும், 5 நாட்களில் 100 மில்லியன் பயனர்களையும் பெற்று அசத்தியது. ஆனால், அதனைத் தொடர்ந்து த்ரெட்ஸ் சமூக வலைத்தளத்தில் இணையும் பயனர்களின் எண்ணிக்கையும், த்ரெட்ஸின் தினசரி பயனர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக ட்விட்டரில் சில பயனர்கள் தரவுடன் பதிவுகளை பதிவிட்டிருந்தார்கள்.

த்ரெட்ஸ்

150 மில்லியனை பயனர்களை எட்டிய த்ரெட்ஸ்: 

த்ரெட்ஸில் தினசரி பயனர் பயன்பாட்டு எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அத்தளம் 150 மில்லியன் பயனர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது 'குறுகிய காலத்தில் 150 மில்லியன் பயனர்களைப் பெற்ற செயலி' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது த்ரெட்ஸ். அதிக அளவில் பயனர்களைப் பெற்றிருந்தாலும், உலகில் ஐந்து நாடுகளிலிருந்தே 80%-தத்திற்கும் மேலான பயனர்களைப் பெற்றிருக்கிறது த்ரெட்ஸ். அந்தப் பட்டியலில் 32% பயனர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. அதனைத் தொடர்ந்து, 22% பயனர்களுடன் இரண்டாமிடத்தில் பிரேசிலும், 16% பயனர்களுடன் மூன்றாமிடத்தில் அமெரிக்காவும் இருக்கின்றன. த்ரெட்ஸ் சமூக வலைத்தளத்தில் 8% பயனர்களுடன் மெக்ஸிகோ நான்காவது இடத்திலும், 5% பயனர்களுடன் ஜப்பான் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.