வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று. போதுமான முன்பணம் கையிருப்பு: உங்கள் சொத்து மதிப்பில் 75-90 % மட்டுமே வீட்டுக் கடனாக பெற முடியும். மீதமுள்ள தொகையை முன்பணமாக செலுத்த நேரிடும். எனவே, உங்களிடம் தேவையான கார்பஸ் நிதி இருக்கிறதா என உறுதி செய்யவேண்டும். எனினும், கையிருப்பில் உள்ள அவசர நிதியிலிருந்து பணத்தை முன்பணமாக செலுத்துவது நல்ல யோசனையல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
வீட்டுக்கடன் விண்ணப்பம் செய்யும் முன்பு
கடன் வழங்குபவர்களின் போர்ட்போலியோக்கள் ஒப்பீடு: கிரெடிட்டர்களின் வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணம், LTV விகிதம் போன்றவை ஒப்பிட்டு, உகந்த கடன் காலம் மற்றும் குறைவான வட்டி விகிதம் அளிக்கும் நபரை அணுகலாம். EMI காலம்: வீடு கடனுக்கு கிட்டத்தட்ட 20 வருடங்கள் EMIகளை செலுத்த வேண்டியிருக்கும். ஆகவே, அதற்கான வருமான வழிவகை செய்ய வேண்டும். EMI என்பது உங்கள் மொத்த மாதாந்திர வருமானத்தில் 40 % மேல் இருக்கக்கூடாது. வட்டி விகித நிலவரங்கள்: ஒரு வீட்டை வாங்குவது நடைமுறையில் உள்ள வட்டி விகிதங்களிலிருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும். வட்டி விகிதங்கள் குறையும் வரை காத்திருந்தால், உங்களுக்கு ஏற்ற ஒரு சொத்தை வாங்குவதை நீங்கள் இழக்க நேரிடும்.