விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள்
ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (பிப் 10) காலை 9.18 மணியளவில் SSLVD2 என்ற சிறிய செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இங்கே. 156 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளை, 75 பள்ளிகளில் இருந்து சுமார் 750 பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இஸ்ரோவின் கூற்றுப்படி, SSLV 5௦௦ கிலோ வரையிலான செயற்கைகொள்களை பூமியின் தாழ்தள ஆர்பிட்டுகளில் தேவைப்படும் நேரத்தில் உடனே லான்ச் செய்ய முடியும். இந்த ராக்கீத் 34மீட்டர் உயரம், 2 மீட்டர் சுற்றளவுடன், 120 டன் எடை சுமக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்ணில் பாய தயாராக இருக்கும் ராக்கெட்
கடந்த ஆகஸ்ட் மாதம், சிறிய செயற்கைகோள்களை சுமந்து செல்வதற்காக எஸ்எஸ்எல்வி டி1 ரக ராக்கெட்டை இஸ்ரோ ஏற்கனவே விண்வெளியில் ஏவியது. ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ராக்கெட் திட்டமிட்ட இலக்கை அடையவில்லை. அது மட்டுமில்லாமல், பூமியின் செயற்கை கொள் இஒஎஸ் 07உம் தொல்வியடைந்துள்ளது. இதையடுத்து, தற்போது மேம்பட்ட அம்சங்களுடன் டி2 ரக ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்படுகிறது. விண்ணில் ஏவப்பட, எரிபொருள் நிரப்பப்பட்டு இந்த ராக்கெட் தயாராக இருக்கிறது என்றும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.