Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?!
பாட்காஸ்ட் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் செயலிகளில், முன்னணி வகிக்கும் Spotify இந்தியப் பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாரம் 2 ரூபாய்க்கு புதிய பிரீமியம் மினி திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் இணைந்தால், spotify பிரீமியமில் உள்ள அனைத்து சலுகைகளையும் உபயோகிக்கலாம். பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் பட்டியல் அனைத்தையும், விளம்பரமில்லாமல், இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்துகொள்ளலாம். எனினும், இந்த மினி திட்டத்தில் 1 கணக்கிற்கு, 1 சாதனம் மட்டுமே பயன்படுத்த அனுமதி. இந்த புதிய அம்சம் இந்தியாவில் தொடங்கி ஆசியா முழுவதும் வெளியிடப்படும் என Spotify இன் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி, செயலியில் 3 புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: Challenge, Rewards & Help
Spotify பிரீமியம் சந்தா
இதற்கு முன்னர், இந்த ஸ்ட்ரீமிங் சேவையானது, பிரீமியமாக, 1 நாளுக்கு 7 ரூபாய் அல்லது 1 வாரத்திற்கு 25 ரூபாய்க்கு கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்தது. இப்போது, ஒரு சவாலை முடித்தால், இந்த புதிய சலுகையை பெறலாம் என அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி, சலுகையைப் பெற, பயனர்கள் அடுத்த 30 நாட்களில், ஏதேனும் 10 நாட்களுக்கு மினி பிரீமியம் சந்தா வாங்கவேண்டும் அதன்படி,10 நாட்களுக்கு பிரீமியம் மினியைப் பயன்படுத்த ரூ.7 திட்டத்தை வாங்கினால், ஒவ்வொரு நாளும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதேபோல, வார திட்டத்தை வாங்கினால், ஒவ்வொரு வாரத்திற்குப் பிறகு ரூ.25 ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த சவாலை வெற்றிகரமாக முடித்தபின், Spotify பிரீமியம் மினி சந்தா 7 நாட்களுக்கு 2 ரூபாய் வீதம் வழங்கப்படும்.