Snapchat பயனர்கள் 375 மில்லியனாக உயர்வு - பின்னணி!
புகைப்பட செய்தி செயலியான ஸ்னாப்சாட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 375 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் இவான் ஸ்பீகல், பாபி மர்பி மற்றும் ரெகி பிரவுன் (Evan Spiegel, Bobby Murphy, Reggie Brown) ஆகியோரால் நிறுவப்பட்டது Snapchat. புகைப்படங்களையும், வீடியோக்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஸ்னாப்சாட் அனுமதிக்கிறது. ஸ்னாப்சாட், filter-கள் மற்றும் லென்ஸ்களையும் வழங்குகிறது, இவை மிகவும் பிரபலம். இந்திய சந்தையில் ஸ்னாப்சாட் 2018ல் இருந்து பயன்பாட்டுக்கு வந்தது. இரண்டாவது காலாண்டில் தினசரி செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையில் 40% அதிகரித்தது. உலகளவில், டிசம்பர் 2020 காலகட்டத்தில் முடிவடைந்த காலாண்டில் தினசரி 265 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்டிருந்தது ஸ்னாப்சாட். பயனர்களால் சராசரியாக 5 பில்லியனுக்கும் அதிகமான 'ஸ்னாப்கள்' உருவாக்கப்பட்டன.
Snapchat வருமானம் மற்றும் பயனாளர்கள் அதிகரிப்பு
அமெரிக்காவில் பயனாளர்கள் எண்ணிக்கையில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், ஐரோப்பாவில் அதிகரித்தது. ஸ்னாப்ஷாட் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கட்டண சந்தாரர்களை கொண்டுள்ளதாக சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் Snapchat இன் பயனர் தளம் உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் பெரிதாக வளர்ச்சியடைந்துள்ளது. Q4 இல், DAU ஆண்டுக்கு ஆண்டு 17% உயர்ந்து 56 மில்லியனாக அதிகரித்துள்ளது. தற்போது 375 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. தொடர்ந்து 2023 இன் முதல் மூன்று மாதங்களில் வருவாய் 2% முதல் 10% வரை குறையும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் 2022ன் கடைசியில் வருவாய் குறைந்து முதலீட்டாளர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.